நிக் ஷூ நிறுவனத்தின் தெய்வநிந்தனைக்கு எதிராக போராட்டம்


இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாக முஸ்லிம்கள் பலர் தெரிவிக்கின்ற நிக் நிறுவனத்தின் பயிற்சி ஷூ ஒன்றுக்கு எதிரான ஆன்லைன் போராட்டத்திற்கு, இந்தோனீசியாவின் பிரதான இஸ்லாமிய மதகுருக்களின் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

 

ஏர் மேக்ஸ் 270 என்கிற பயிற்சி ஷூவை நிக் நிறுவனம் திரும்ப பெற வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய ஆன்லைன் புகாரில், இந்தோனீசியாகள் உள்பட மொத்தம் 39 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

 

இந்த ஷூவில் பொறிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் இலட்சினை அல்லாவை அல்லது கடவுளை குறிக்கின்ற அரேபிய சொல்லை போன்று இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மத சுதந்திரத்திற்கும் இறைநம்பிக்கைக்கும் மதிப்பளிக்கும் ஒவ்வொருவரும், எல்லா முஸ்லிம்களும் இந்த புகாரில் கையெழுத்திட வேண்டு்ம் என்று வலியுறுத்துவதாக இந்த ஆன்லைன் புகாரை தொடங்கியுள்ள சாய்கா நோரீன் கூறியுள்ளார்.

 

உலக அளவில் அல்லாவை குறிப்பதற்கான அரேபிய எழுத்தின் வடிவத்தில் இருக்கின்ற இந்த ஷூ வடிவமைப்பின் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் விற்பனையில் இருந்து நிக் நிறுவனம் உடனடியாக திரும்ப பெற வெண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

 

நிக் நிறுவனத்தின் ஷூவில் எழுதப்பட்டுள்ள இலட்சனை அல்லாவை குறிப்பிடும் சொல்லை போலவே இருப்பதாக இந்தோனீசிய உல்மா கவுன்சிலின் பொதுச் செயலாளர் அன்வார் அப்பாஸூம் தெரிவித்து்ளளார்.

Add new comment

4 + 5 =