ஆப்கானில் மீண்டும் வலுபெறும் தலிபான்கள்


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் வலுபெற்று வருவது அந்நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் மாபெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தலிபான்களின் ஆதிக்கம் வலுபெற்று வருவதாக அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

 

தலிபான்கள் ஆப்கானி்தானில் பல இடங்களை இன்னும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

 

2015 ஆம் ஆண்டு 75 விழுக்காடு இடங்கள் ஆப்கானிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தற்போது 55 விழுக்காடு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

 

அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படை ஆப்கானிஸ்தானில் தங்கி செயல்படுகின்றன.

 

சமீபத்தில் தலிபான்களின் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Add new comment

1 + 2 =