துருக்கியில் 40 மணிநேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சிறுவன்


துருக்கியில் புதன்கிழமை இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து 40 மணிநேரத்திற்கு பின்னர், 16 வயது சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டுள்ளான்.

 

துருக்கியின் பெரிய நகரான இஸ்தான்புல்லியில் புதன்கிழமை கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.

 

அதிலிருந்து 16 மணிநேரத்திற்கு பிறகு 5 வயது சிறுமி மீட்டக்பட்டார்.

 

மேலும் பலரை தேடும் பணி தொடர்ந்தது.

 

இந்நிலையில், இந்த இளைஞரின் உதவி குரலை மீட்பு பணியாளர்கள் கேட்டுள்ளனர்.

 

தொடர்ந்து போரராடி, 40 மணிநேரத்திற்கு பிறகு, இந்த சிறுவன்  மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 

இந்த விபத்தில் 14 பேர் இறந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர்.

Add new comment

7 + 7 =