மன்னிப்பு கேட்கும் பிலிப்பின்ஸ் அதிபரின் போலீஸ் மு்னனாள் தலைவர்


பிலிப்பீன்ஸ் அரசு போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கிய முன்னாள் தேசிய காவல்துறை தலைவர், தன்னுடைய பதவி காலத்தில் நிகழ்ந்த ஆயிரக்கணக்கான இறப்புகளுக்கு கத்தோலிக்க பேராயர் மன்னிப்பு வழங்க வேண்டுமென வேண்டுகோள் வைத்துள்ளார்.

 

பிலிப்பீன்ஸ் அதிபர் இரண்டரை ஆண்டுகளாக நடத்தி வருகின்ற போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில், போதைபொருள் பயன்படுத்துவோர் அல்லது விற்பனையாளர் என சந்தேசப்பட்ட 20 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளனர்.

 

பிலிப்பீன்ஸ் தேசிய காவல்துறை 2016ம் ஆண்டிலிருந்து 4,540 வழக்குகளை மட்டுமே ஒப்புக்கொள்கிறது. மீதியான 23 ஆயிரம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

எனது மனசாட்சியை மிகவும் தொந்தரவு செய்வதால், கொல்லப்பட்டோருக்காக மன்னிப்பை வேண்டுகிறேன் என்று ஜெனரல் ரோனால்ட் டெலா ரோசா கூறியுள்ளார்.

 

தான் பிலிப்பீன்ஸ் போலீஸ் தலைவரக இருந்தபோதுதான் பல கொலைகள் நடைபெற்றதை இவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Add new comment

14 + 3 =