அரசியல் பிரச்சனைக்கு இறைவனின் உதவியை நாடும் நாகா மக்கள்


பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்ற நாகலாந்து அரசியல் பிரச்சனையை அதாவது கிளர்ச்சியாளர் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண தோல்வியடைந்துள்ள நிலையில், இறைவனின் தலையீடு ஏற்பட நாகா மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

 

மிகவும் விரக்தி அளிக்கின்ற தங்களின் பிரச்சனைக்கு முன்னதாகவே தீர்வு காண்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு செப வழிபாடுகள் நடத்துவதற்கு சமய பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு எல்லா திருச்சபைகளிடமும் நாகலாந்து கூட்டு கிறிஸ்தவ மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

திருச்சபைகள் செப வழிபாடுகளை நடத்துவதன் மூலம், இந்தியாவின் மத்திய அரசு தலைவர்களுக்கும், நாகா தேசிய அரசியல் குழு தலைவர்களுக்கும் இறைவன் ஞானத்தை அளிக்க வேண்டுமென இந்த நாகா மன்றம் விரும்புகிறது.

 

வரயிருக்கும் மக்களவை தேர்தலுக்கு முன்னால் இந்த பிரச்சனைக்கு தேர்வு காண இந்த மன்றம் விரும்புகிறது.

 

நாகலாந்தில் இருந்து எழக்கூடிய பிரச்சனைகளை இந்திய அரசு புறந்தள்ளி வைக்கிறது.

 

ஒரு பிரச்சனையை மூடி மறைப்பதற்கு இன்னொரு பிரச்சனையை தொடங்கி, இருக்கின்ற பிரச்சனையை சவ்வாக இழுத்து செல்வது இப்போது தெரியவந்துள்ளது.

 

இவற்றை நாம் கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும். நம்பிக்கையாளர்களின் செபத்தால் கடவுள் தலையிடுவார் என்று இந்த நாகா மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  

Add new comment

2 + 4 =