மத்திய கிழக்கில் சர்வாதிகாரிகளை அமெரிக்கா ஆதரிக்கிறது -ஈரான் குற்றச்சாட்டு


மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்கா சர்வாதிகாரிகளையும், தீவிரவாதிகளையும் ஆதரித்து வருவதாக ஈரான் விமர்சனம் செய்துள்ளது.

 

இராக்கில் அமெரிக்க ராணுவத்தளம் இருப்பது மிகவும் முக்கியம். அப்படி இருந்தால்தான் ஈரானின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும். ஈரான் மிகவும் ஆபத்தானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

 

டிரம்பின் இந்த கூற்றுக்கு பதிலாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிப் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்கா ஆதரித்து வருகின்ற இந்த சர்வாதிகாரிகளும், தீவிரவாதிகளும் இந்த பிரதேசத்தையே அழித்துக் கொண்டிருப்பதாக இந்த ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார். .

 

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடன் ஆறு நாடுகள் இணைந்து செய்திருந்த  ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.

 

என்றாலும், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

 

ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

 

மேலும், தங்களின் கூட்டாளி நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது.

Add new comment

1 + 10 =