வியட்நாம் புத்தாண்டில் பொது நலனுக்காக ஒன்றிணைய வாழ்த்துகள்


சந்திர நாள்க்காட்டியின்படி வியட்நாம் புத்தாண்டின்போது, மக்கள் பொது நலனுக்காகவும், மனித மதிப்பீடுகளுக்காகவும் பணிபுரிய வேண்டும் என்று அந்நாட்டு ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

 

செல்வ செழிப்பையும், அதிஷ்டத்தையும் கொண்டு வரும் என்று பாரம்பரியமாக கருதப்படும் பன்றி ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி தொடங்கியது.

 

சுயன் லாக் மறைமாவட்ட ஆயர் ஜோசப் டின் டியுக் தாவ் அளித்த புத்தாண்டு செய்தியில், திருமண விருந்துகள், தேவாலய திறப்பு விழாக்கள், ஆண்டு கொண்டாட்டங்கள், எல்லா பெரிய விழாக்கள் மற்றும் சடங்குகளில் பன்றி இறைச்சி மிக முக்கிய உணவாக பரிமாறப்படுகிறது.

 

இவற்றில் மக்கள் அனைவரையும் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டு வரக்கூடிய கருவியாக பன்றி செயல்படுகிறது என்று குறிப்பிடடுள்ளார்.

 

புத்தாண்டில் நம்மை சுற்றியிருக்கும் மக்கள் அனைவரையும் இணைப்பவர்களாகவும், பிறருக்கு மகிழ்ச்சி அளிப்போராகவும் நாம் ஒவ்வொருவரும் உருவாக வாழ்த்துவதாக ஆயர் தாவ் கூறியுள்ளார்.

 

பன்றி வடிவிலான உண்டியலில் பணம் போட்டு வைத்து மக்கள் பாரம்பரியமாக சேமிக்கின்றனர் என்று வியட்நாம் ஆயர்கள் பேரவையின் கத்தோலிக்க கல்விக்கான பாப்பிறை பணிக்குழுவின் தலைவரான ஆயர் டாவ் கூறியு்ளளார்.

 

பணம், ஆற்றல், நேரத்தை தேவையற்ற காரியங்களை செய்து வீணாக்கி விடாமல், அவற்றை பொது நலத்திற்காக செலவிட வேண்டுமென கத்தோலிக்கரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

ஒவ்வொரு நாளும் செய்கின்ற நல்ல காரியங்களின் அடிப்படையில் மக்களின் வாழ்க்கைகள் அமைகின்றன. எனவே நல்ல காரியங்களை அதிகமாக செய்து, உங்களது குடும்பங்களும், பங்குகளும் கடவுளை புகழ்ந்து, சமூகங்களுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன் என்ற ஆயர் டாவ் தெரிவித்து்ளளார்.

 

பன்றி வடிவிலான உண்டியல்களை பயன்படுத்தி பணம் சேமிக்கும் செயல்பாடுகள் வழியாக புத்தாண்டில் மக்கள் நாட்டுப்பற்றை வளர்க்க வேண்டுமென மனித உரிமைகளுக்காக வாதிடும் வழக்கறிஞரான அருட்தந்தை ஆன்றனி ல நகோக் தான் கூறியுள்ளார்.  

Add new comment

2 + 5 =