பாகிஸ்தான் ஊடகங்களால் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர்


பாகிஸ்தானிலுள்ள முஸ்லிம் அல்லாதோர் பற்றிய ஊடக செய்தி வெளியீடுகள் அனைத்தும் தெய்வநிந்தனை போன்ற தலைப்புகளோடு தொடர்படையதாக இருப்பதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

 

சிறுபான்மையினர் பொதுவாக பாதிகக்ப்பட்ட கட்டமைப்பில் சித்திரிக்கப்படுகின்றனர்.

 

அவர்களை பற்றிய பெரும்பான்மையான செய்திகளில், அவர்களுடைய கூற்று, கருத்து அல்லது பார்வைகள் இடம்பெறுவதில்லை.

 

அவாகளுடைய வழக்கில் தங்களின் குரலை எழுப்ப முடியாதவர்களாக ஆக்கப்படுகின்றனர்.

 

ஊடகங்களில் வெளியாகும் பெரும்பாலான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதுபோல இருப்பதில்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.

 

ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் வளாச்சிக்கான நிறுவனம் நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் பிப்ரவரி 2ம் தேதி வெளியாகியது.

 

பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகையான 220 மில்லியனில் வெறும் 4 சதவீதமே மத சிறுபான்மையினர்.

 

மத சிறுபான்மையினர் பற்றிய ஏறக்குறைய எல்லா செய்தி வெளியீடுகளும் எதிர்வினைகள் அல்லது ஏதாவது நிகழ்வோடு தொடபுடையது. அவர்களை பற்றி வெளியாகும் செய்திகள் வெகுசில.  

 

சிறுபான்மையினர் அனைவரும் துப்புரவு பணியார்கள், குப்பத்தில் வாழ்வோர், சட்டவிரோதமாக செயல்படுவோர், வீட்டுப் பணியாளர்கள், பாகுபாட்டால் பாதிக்கப்பட்டோர் அல்லது கட்டாயமாக மத மாற்றம் அடைந்தோர் என்று சித்தரிக்கப்படுகின்றனர்.

 

வானொலி நிகழ்ச்சிகள் இவர்களை பற்றிய எந்தவொரு நிகழ்ச்சியையும் ஒலிப்பரப்புவது கிடையாது என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

 

செய்தித்தாள்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள், வானொலி நிலையங்கள், இணையதளங்களில் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 முதல் 21ம் தேதி வரை வெளியான செய்திகள் இந்த ஆய்வில் எடுக்கப்பட்டுள்ளன.

 

இந்த காலம்தான், மேல்முறையீட்டில் ஆசியா பீபி என்ற கிறிஸ்தவ பெண்ணின் வழக்கில் தீர்ப்பை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்த தருணமாகும்.

Add new comment

13 + 7 =