காணொளிகள் மத விதிகளுக்கு புறம்பாக அமையக்கூடாது – சீனா ஆணை


இணையத்தில் பதிவேற்றப்படுகின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் அதற்கு முன்னதாக மீளாய்வு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று சீன இணையதள சேவையின் கூட்டமைப்பு சமீபத்தில் புதிய விதிமுறைகளை வழங்கியுள்ளது.

 

மத உள்ளடக்கங்களில் சீன அரசின் கண்காணிப்பு மற்றும் தணிக்கையை இந்த விதிகள் சுட்டிக்காட்டுகின்றன.

 

மதக் கொள்கைகளுக்கு புறம்பான எந்தவொரு உள்ளடக்கமும் வெளியிடுவதில் இருந்து முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இணைய சிறிய காணொளி தளங்கள் மற்றும் இணையத்தில் பதிவிடப்படும் மீளாய்வுக்கான பொது விதிமுறைகள் ஆகியவற்றை ஜனவரி மாதம் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த சீன இணையதள சேவையின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

 

நிகழ்ச்சியின் தலைப்பு, ரெத்ன சுருக்கம், காட்சிகள், கூற்றுகள், பிற உள்ளடக்கங்கள் ஆகிய எல்லாம், சிறிய காணொளிகள் அனைத்திலும் முன்னதாகவே மீளாய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நிகழ்ச்சிகளை பதிவேற்றுவதற்கு உண்மையான பெயரை வழங்கி அதனை சரிபார்க்கும் மேலாண்மை அமைப்பில் கணக்குகள் இது சம்பந்தமான தளங்கள் பதிவு செய்திருக்க வேண்டும்.

 

சட்டங்களையும், விதிமுறைகளையம் மீறியுள்ள எல்லா இணைய முகவரிகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று விதிமுறை குறிப்பிடுகிறது.

 

இணையத்தில் கருத்துக்களை வெளியிடும் பயனர்கள் ஒரு வாரத்தில் மூன்று முறை அல்லது அதற்கு மேலாக விதிகளை மீறியிருந்தால், அவர்களின் தகவல்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

 

இந்த விதி மீறலின் கனாகனத்தை பொறுத்து ஓராண்டுக்கு, மூன்றாண்டு அல்லது நிரந்தமாக என பதிவேற்றுவதற்கான தடை வழங்கப்படும்.

 

இந்த சிறிய காணொளிகளிலுள்ள உள்ளடக்கத்தை பொறுத்த வரை அறிவுசார் காப்புரிமைக்கு பதிவேற்றும் தளங்கள் பொறுப்பேற்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

Add new comment

12 + 3 =