மரியன்னை சிலை எரிப்பில் அரசியல் என சந்தேகம்


இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் மரியன்னை சிலை ஒன்று தீயால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதுபோன்ற தாக்குதலுக்கு மத்தியில் சமீபத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்த மரியன்னை சிலை தாக்குதலுக்கு பின்னால் அரசியல் இருக்கலாம் என்று திருச்சபை தலைவர்கள் சந்தேகப்படுகின்றனர்.

 

பிப்ரவரி 3ம் தேதி ஜாபுவா மறைமாவட்டத்தின் இஷ்கார் கிராமத்திலுள்ள புனித ஜோசப் பங்கின் க்தோலிக்கர்கள் தங்களின் குரோட்டோவிலுள்ள மரியன்னை சிலையை பகுதி அளவு எரிந்த நிலையில் கண்டெடுத்தனர் என்று இந்த மறைமாவட்ட செய்தி தொடர்பாளர் அருட்தந்தை ராக்கி ஷா தெரிவித்தார்.

 

70 ஆண்டு பழமையான இந்த பங்கில் சுமார் 4 ஆயிரம் கத்தோலிக்கர்கள் உள்ளனர்.

 

இந்த பகுதியில் வாழும் சிறுபான்மை இந்துக்களால், இது போன்றதொரு நடவடிக்கையை இதற்கு முன்னால் ஒருபோதும் பார்க்கவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

வரும் மே மாதம் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் காலம் முடிவடைவதால், மீண்டும் தங்களின் தொகுதியை தக்க வைத்து கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயம் பெறுவதற்கான முயற்சியாக இது இருக்கலாம் என்று திருச்சபை தலைவர்கள் நம்பகின்றனர்.

 

கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சியிடம் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது.

 

அருட்தந்தை ஷா கூறுவதுபோல இந்த தாக்குதல் கிறிஸ்தவர்களின் வாக்குகளை பெறுவதற்கு காங்கிரஸ் கட்சி செயல் திறனற்றது என்பதை காட்ட முயலுகின்ற பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

 

இது தொடர்பாக மாநில காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளதாக அருட்தந்தை ஷா கூறியுள்ளார்.

Add new comment

8 + 7 =