கடவுளிடம் உள்ள இறைநம்பிக்கையால் பிறந்த அபுதாபி ஆவணம் - திருத்தந்தை


சில முஸ்லிம் தலைவர்கள் தன்னை மோசமாக கையாளுவதைவிட பல்சமய உரையாடலில் ஈடுபடாமல் இருப்பதால் வரும் விளைவுகளால் அதிக அச்சமுறுவதாக  திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

அபதாபியில் இருந்து பிப்ரவரி 5ம் தேதி ரோமுக்கு விமானத்தில் பயணிக்கையில் செய்தியாளர்களிடம் திருத்தந்தை இதனை தெரிவித்தார்.

 

பத்திரிகையாளர்கள் உள்பட சிலரால் அவர் பயன்படுத்தப்படுவதை அவரே அனுமதிப்பதாக மக்கள் எப்போதும் கூறி வருகின்றனர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இதுவும் எனது பணிகளின் ஒரு பகுதி என தெரிவித்துள்ளார்.

 

என்னை பொறுத்தவரையில் இப்போதைய தருணத்தில் இருக்கினற மிக பெரிய ஆபத்து அழிவு, போர் மற்றும் நம்மிடையே உள்ள வெறுப்புணர்வு என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

 

இது தொடர்பாக தானும், அல் அசாரின் மிக பெரிய இமாம் எகிப்திய ஷேக் அகமத் எல்-தாயிப்பும் ஓராண்டாக மேற்கொண்டு வந்த கடித பரிமாற்றங்களால், பிப்ரவரி 4ம் தேதி கையொப்பமிட்ட ஆவணத்தை பற்றியும் அவர் விளக்கினார்.

 

இதன் மூலம் மனித சகோதரத்துவமும், கிறி்ஸ்த்தவ முஸ்லிம் புரிதலும் வளர்க்கப்படும் என்று அவர் கூறினார்.

 

இறைநம்பிக்கை உடையோர் கரங்களை நீட்டி அரவணைத்து, செபிக்காமல் இருந்தால், நமது இறைநம்பிக்கைகள் பொய்த்து போகும் என்று அவர் கூறினார்.

 

அபுதாபியில் கையொப்பமிட்ட ஆவணம், எல்லாரின் மற்றும் அமைதியின் தந்தையான கடவுளிடம் இருக்கும் இறைநம்பிக்கையில் பிறந்ததாகும் என்று அவர் கூறியு்ளளார்.

Add new comment

12 + 0 =