வியட்நாமில் டிர்ம்ப்-கிம் அடுத்த சந்திப்பு


வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னை வியட்நாமில் சந்தித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

ஐ.நா. பாதுகாப்பு அவையின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியதை உலக நாடுகளின் எதிர்த்து வந்தன.

 

இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்து வந்தது.

 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர்.

 

வட கொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங்-உன் உறுதி அளித்தார்.

 

அதற்கு பின்னர், இருநாட்டு உறவில் இணக்க சூழல் உருவானது. ஆனால், உடன்படிக்கை ரீதியாக பெரிய முன்னேற்றம் ஏற்பட்வில்லை.

 

இதற்கு தீர்வுகாண 2வது உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங்-உன் ஆகிய இருவரும் பரபஸ்பர விருப்பம் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், வியட்நாமில் பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னை சந்திக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.  எந்த இடத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று இதுவரை தெரிவிக்கவில்லை.

Add new comment

1 + 0 =