திருச்சபையில் பாலியல் உரிமை மீறல் பற்றி திருத்தந்தை கருத்து


கத்தோலிக்க திருச்சபைகளில் அருட்சகோதரிகள் பாலியல் ரீதியாக உரிமைகள் மீறப்படும் பிரச்னை உள்ளது. பல பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

 

இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், அதனை முற்றிலும் ஒழிப்பதற்கான வேலைகளை செய்து வருவதாகவும் திருத்த்நதை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

இதன் மூலம் அருட்தந்தையரால் அருட்சகோதரிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதை அறிந்திருப்பதாக திருத்த்நதை முதல்முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.  

 

இது தொடர்பாக சில அருட்பணியாளர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  இதற்கு எதிராக தொடர்ந்து போராட போவதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

Add new comment

8 + 3 =