மத மாற்றம் பழங்குடியின தகுநிலையை மாற்றுவதில்லை – இந்திய நீதிமன்றம்


பழங்குடியினர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிவிட்டாலும் அவர்களது பழங்குடியின தகுநிலை மாறுவதில்லை என்ற சட்டிஸ்கரிலுள்ள உயர்நீதிமன்றம் தீாப்பளித்துள்ளது.

 

பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை மாத மாறியவரும் அனுபவிப்பதை இந்த தீர்ப்பு சாத்தியமாக்கி உள்ளது.

 

சட்டிஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அஜித் யோகியின் மகன் அமித் யோகிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரை இந்த தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

 

இந்து ஆதரவு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சமீரா பால்காரா தொடுத்த புகார் விசாரிக்கப்பட்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

2013ம் ஆண்டு மாநில தோதலில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த தொகுதியில் அமித் யோகி வெற்றி பெற்றார். ஆனால், இந்த வெற்றி செல்லாது என்று பால்காரா நீதிமன்றத்திற்கு சென்றார்.

 

அமித் யோகியின் குடும்பம் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிவிட்டதால், அவரை பழங்குடியினராக கருத முடியாது என்று பால்காரா வாதிட்டார்.

 

கிறிஸ்தவத்திற்கு மாறிவிட்ட பழங்குடியினர் தேர்தலில், கல்வி நிறுவனங்களில், அரசு வேலைவாயப்புகளில் இடஒதுக்கீட்டை பெற்ற முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியிலுள்ள கடும்போக்காளர்கள் கூறிவருகின்றனர்.

 

இத்தகைய சலுகைகள் பழங்குடியினர் மற்றும் தலித் மக்கள் வாழ்வில் மேம்பாடு அடைய வழங்கப்பட்டு வருகிறது.

 

1950ம் ஆண்டுக்கு முன்பிலிருந்தே இருந்து வருகின்ற இந்த உரிமைகளை மீட்டெடுக்க, பெரும்பான்மையாக வாழும் இந்துக்களிடம் இருந்து பிரச்சனை வரும் என்று பயந்த இதற்கு முந்தைய அரசுகள் எல்லாம் இந்த வேண்டுகோளை கண்டுகொள்ளாமலேயே வந்துள்ளன.  

Add new comment

1 + 0 =