ஏமன் போரில் துன்புறும் குழந்தைகளுக்கு செபிக்க திருத்தந்தை அழைப்பு


ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் சிக்கி துன்புறும்  குழந்தைகளுக்காக செபம் செய்வோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அனைவருககும் அழைப்புவிடுத்துள்ளார்.

 

ஏமனில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் அழுகை அந்த இறைவனை சென்றடையும். அவர்களுக்காக நாம் தொடர்ந்து செபிப்போம்.

 

அவர்கள் பசியில் இருக்கிறார்கள். தாகமாக இருக்கிறார்கள். மருந்துகள் இல்லாமல் இக்கிறார்கள். அவர்கள் உயிர் ஆபத்தில் உள்ளது என்று அபுதாபியில் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

 

அரேபிய தீபகற்பத்திற்கு செல்லும் முதல் திருத்தந்தை என்ற பெருமையை பிரான்சிஸ் பெற்றுள்ளார். 

 

தென் மேற்கு ஆசிய நாடாக இருக்கின்ற ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

அதிபர் மன்சூர் ஹைதிக்கு சௌதி அரேபியா ஆதரவளிக்க,  ஹூதி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

 

ஏமன் அரசுடன் இணைந்து சௌதி நடத்தும் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

6 + 14 =