பொலிவியாவில் நிலச்சரிவு, 11 பேர் பலி


தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவின் வடகிழக்கு மலைப்  பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் பலியாகி, பலர் காயமடைந்துள்ளனர்.

 

பொலியாவில் கடந்த சில நாட்களாகவே கடும் மழை பொழிந்து வருகிறது.

 

இதனால், தலைநகரின் லா பாஸ்ஸின் வடக்குப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர்.

 

பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகள் சேதமாகியுள்ளன. மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்க பொலிவியா அரசு கட்டளையிட்டுள்ளது.

Add new comment

6 + 7 =