இலங்கை சுதந்திர தினத்தில் கறுப்பு நாள் அனுசரிப்பு


இலங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் தலைநகர் கொழும்பிலுள்ள காலி முகத்திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

 

இராணுவ அணிவகுப்புடன், காலி முகத்திடலுக்கு அழைத்து வரப்பட்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன .தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினமான பிப்ரவரி 4ம் தேதி  வடக்கு மாகாணத்தில் கறுப்பு நாளாக அறிவித்து கறுப்புக் கொடிகள் இயேற்றப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகள் ஏற்றப்ட்டதுடன், ''எமக்கு சுதந்திர தினம் எப்போது? என்று எழுதப்பட்ட பதாதகையும் அங்கு கட்டப்பட்டிருந்தது.

 

பல்கலைக்கழகத்தின் தேசியக்கொடி ஏற்றப்படுகின்ற கொடி கம்பத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.

 

உள்நாட்டு போர் முடிந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் கண்டறியப்படவில்லை,

 

தமிழர் நிலங்களில் இருந்து இலங்கை ராணுவம் வெளியேறவில்லை. அரசியல் கைதிகள் விடுதலையாகவில்லை.

 

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழரின் நிலங்கள் சூறையாடப்படுகின்றன.

 

தொல்பொருள் திணைக்கள ஆய்வு என்று கூறி வழிபாட்டு தலங்கள் ஆக்கிரமிக்கபடுகின்றதன.

 

தமிழீழ விடுதலை புலிகள் மீண்டும் உருவாகிறார்கள் என்ற சாக்குப்போக்கில் அப்பாவி இளைஞர்கள் கைது தொடர்கிறது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் புகார் கூறியுள்ளது.

 

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யபட்டும் காணாமல் ஆக்கப்படும் சூழ்நிலையில் சுதந்திரமான சுவாசக்காற்றை சுவாசிக்க தமிழ் மக்களுக்கு தடைகளே உள்ளன.

 

இந்நிலையில் யாருக்கு சுதந்திரம் கிடைத்தது என்கிற கேள்வியே எம்முன்னே எழுந்து நிற்கிறது இந்த இந்த மாணவர் ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.

Add new comment

9 + 0 =