ஐக்கிய நடைப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும்


பிலிப்பீன்ஸிலுள்ள கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அமைதி நிலவ செய்ய அழைப்புவிடுத்து ஐக்கிய நடைப்பயணத்தை நடத்தியுள்ளனர்.

 

கடந்த வாரத்தில் பிலிப்பீன்ஸின் தெற்கு பகுதியில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதலை தொடர்ந்து இந்த ஐக்கிய நடைப்பயணம் நடைபெற்றுள்ளது.

 

பிலிப்பீன்ஸிலுள்ள முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒன்று என்பதை உலகிற்கு காட்ட பிப்ரவரி 3ம் தேதி மணிலாவில் நூற்றுக்கணக்காகோர் கூடி செப பேரணி நடத்தியு்ளளனர்.

 

கடந்த ஜனவரி 27ம் தேதி பிலிப்பீன்ஸின் ஜோலோ மாகாணத்தின் கத்தோலிக்க கத்தீட்ரலில் 22 பேரின் உயிரை காவு வாங்கிய வெடிகுண்டு தாக்குதலையும், ஜாம்போயாங்கா நகரத்தில் மசூதியில் நடைபெற்ற கிரனேட் வெடிப்பால் 2 பேர் கொல்லப்பட்டதையும் இவர்கள் கண்டித்துள்ளனர்.

 

உலக பல்சமய ஒன்றிப்பு வாரத்தை கடைபிடிப்பதை தொடங்கும் விதமாக, பிப்ரவரி 2ம் தேதி மிண்டனோயின் ககாயான் டி ஒரோ நகரத்திலும் பல்சமய செப பேரணி நடைபெற்றுள்ளது.  

Add new comment

5 + 6 =