மதுரோ பதவியில் இருந்து விலகுவார் – வெனிசுவேலா கர்தினால்


வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ பதவியில் இருந்து விலகுவார் என்று நம்புவதாக தெரிவித்துள்ள காராகஸ் உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், அவ்வாறு செய்து திருத்தந்தை பிரான்சிஸின் அமைதிக்கான அழைப்பை மதுரோ நிறைவேற்றுவார் என்று தெரிவித்திருக்கிறார்.

 

வெனிசுவேலா நாடாளுமன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜூவான் குவய்டோ, அந்நாட்டின் தலைவர் என் தன்னைதானே அறிவித்துக்கொண்டார்.

 

பல எதிர்க்கட்சி வேட்பாளா்கள் போட்டியிட தடைவிதிக்கப்பட்ட கடந்த ஆண்டு நடைபெற்ற சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பில் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்ட அதிபர் மதுரோ, இந்த ஆண்டு பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் இந்த அரசியல் சிக்கல் வெனிசுவேலாவில் எழுந்துள்ளது.

 

மதுரோவின் நிர்வாகம் வெனிசுவேலா மக்களுக்கு மோசமானதாக இருப்பதால், திருத்தந்தையின் வார்த்தையை கேட்டு, அதற்கு செவிமடுக்கும் மதுரோ பதவியில் இருந்து விலகுவார் என்று நம்புகிறேன் என்று 2018ம் ஆண்டு ஜூலை மாதம் கராகஸ் உயர் மறைமாவட்ட பேராயராக ஓய்வு பெற்ற கர்தினால் ஜோர்ஜ் லிபராட்டோ ஊரோசா சாவியோ கூறியுள்ளார்.

 

வெனிசுவேலா அரசு பற்றிய விமர்சன நிலைப்பாடுகளில் திருத்தந்தையின் தொடர் ஆதரவை இந்நாட்டு ஆயர்கள் எப்போதும் பெறுகின்றனர் என்று கர்தினால் மேலும் கூறியுள்ளார்.

 

வெனிசுவேலா நெருக்கடியில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்ற, துன்பத்தை தவிர்கின்ற, நீதியான, அமைதியான தீர்வை விரும்புவதாக கடந்த ஜனவரி 27ம் தேதி திருத்தந்தை பிரானசிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

அரசியல் நெருக்கடியில் பக்க சார்புகளை எடுப்பது தனது வேலையில்லை என்று திருத்தந்தை பிரானசிஸ் அப்போது தெளிவுப்படுத்தினார். .

 

இந்த பிரச்சனைகளில் இந்த நாடுகள் அல்லது பிற நாடுகள் இதனை செய்ய வேண்டும் என்று சொன்னால், எனக்கு தெரியாதவற்றில் நான் பங்காற்றுவது போலாகும். இது மேய்ப்புப்பணி அறிவின்மையாகவும், சேதம் விளைப்பதாகவும் அமையும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருந்தார்.     

Add new comment

6 + 2 =