பாதுகாப்பு அமைச்சராக உயர்ந்த குருமாணவருக்கு இந்தியா அஞ்சலி


பாதுகாப்பு அமைச்சராக உயர்ந்த குருமாணவருக்கான இந்தியா நாடே துக்கம் அனுசரித்த பின்னர், அவரது இறுதி சடஙகும் நிறைவேறியுள்ளது.

 

அது வேறு யாருமல்ல. அந்த குருமாணவராக இந்தியாவின் உயரிய அமைச்சரவைவை எட்டியவர்தான் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

 

இவரது மறைவுக்கு இந்திய தலைமையமைச்சர் மற்றும் குடியரசு தலைவர் போன்ற உயரிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

இந்தியாவில் தொழிற்சங்க தலைவராக பிரபலமாக அறியப்பட்ட பெர்னாண்ட்ஸ் ஜனவரி 29ம் தேதி தனது 88வது வயதில் காலமானானர்.

 

நினைவிழத்தல் நோய்யால் அவர் துன்பப்பட்டு வந்தார்.

 

உயர் சிந்தனையோடு, எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஜனநாயக கொள்கை பிடிப்புடைய தலைவர்களில் ஒருவர். நாம்  எல்லாரும் அவரது இழப்பை நமது வாழ்வில் உணர்வோம் என்று இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தார்.

 

 

சிறந்த தெழிற்சங்க தலைவராகவும், ரயில்வே அமைச்சகத்தின் எதிர்கால நோக்கத்தோடு செயல்பட்டவர் என்று புகழ்ந்த இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி, இந்தியாவின் சிறந்த அரசியல் தலைமையத்துவத்தை அவர் பிரதிபலித்தார். வெளிப்படையான, பயமில்லாத, கபடமற்ற, தொலைநோக்கு பார்வையுடன் நாட்டுக்கு சிறந்த பங்காற்றினார் என்று கூறினார்.

 

தீவிரமான தொழிற்சங்க ஊழியராகதான் ஜார்ஜ் பெர்னாண்டஸை மக்கள் என்றும் நினைவு கூர்வார்கள்.

 

குருமாணவராக கற்று, இறுதியில் பாதுகாப்பு அமைச்சராக வளர்ந்து அரும்பணியாற்றிய ஜார்ஜ் பெர்னாண்டஸின் பணிகள் என்றும் அவர் பெயரை சொல்லட்டும்.

Add new comment

2 + 14 =