நிழலுலக ஆயரை அங்கீகரித்தது சீனா


சீனாவின் ஹெனான் மாகாணத்திலுள்ள நிழலுலக ஆயர் ஒருவர் சீன அரசால் அங்கீகரிக்கப்பட்ட துணை ஆயராக மாறியுள்ளார்.

 

இது சீன அரசு அதிகாரிகளின் பலமான கட்டுப்பாடுகள் நிறைந்த சூழலில் நடைபெற்ற சடங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

 

ஹெனான் மாகாணத்தின் நான்யாங் மறைமாவட்டத்தின் நிழலுலக ஆயரான ஜின் லுகாங், ஜனவரி 30ம் தேதி புனித ஜோசப் தேவாலயத்தில் வைத்து வெளிப்படையாக திருப்பொழிவு செய்து வைக்கப்பட்டார்.

 

கடந்த 2018ம் ஆண்டு சீன வத்திக்கான் தற்காலிக ஒப்பந்தம் உருவான பின்னர், முதல் முறையாக நிழலுலக ஆயர் ஒருவர் பணிபொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.

 

98 வயதான ஆயர் ட்சு பாவ்யு நான்யாங் மற்றும் அன்யாங் ஆயர் ட்சாங் இன்லின் உள்பட 250 பேர் இதற்காக நிறைவேறிய திருப்பலியில் பங்கேற்றனர்.

 

இந்த சடங்குமுறை சீன கத்தோலிக்க திருச்சபை ஆயாகள் பேரவையாலும், சீன கத்தோலிக்க நாட்டுபற்றாளர் கூட்டமைப்பாலும் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஆயர் ட்சு பாவ்யு நான்யாங் 1995ம் ஆண்டு கத்தோலிக்க தலைமை பீடத்தால் ரகசியமாக ஆயராக நியமிக்கப்பட்டர். அவர் 89 வயதான போது திருத்தந்தை பதினாறாம் பென்னடிக் அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.

 

பின்னர் 2007ம் ஆண்டு ஆயர் ஜின், ரகசியமாக துணை ஆயராக நியமிக்க்பபட்டார்.

Add new comment

13 + 4 =