கிறிஸ்தவம், இஸ்லாம் இரு மத புதிய பக்கங்களை எழுதுவதில் மகிழ்ச்சி - திருத்தந்தை


கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என இரண்டு மதங்களுக்கு இடையில் நிலவும் தொடர்பு குறித்த வரலாற்றின் புதிய பக்கத்தை எழுதுவது மகிழ்ச்சி அளிப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் ஐக்கிய அரபு அமீரகம் சென்றார்.

 

அந்த நாட்டு மக்களுக்கு திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில், மதங்களுக்கிடையிலான உறவின் வரலாற்றில், ஒரு புதிய பக்கத்தில் உங்களின் நேசமிக்க தேசத்தில் எழுதுகிறேன். நாம் வேறுவேறாக இருந்தாலும் சகோதரர்கள்தான். எனவே மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

 

பிப்ரவரி 3 முதல் 5ம் தேதி வரை நடைபெறும் மத நல்லிணக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயத் அல்-நயானுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி தெரிவித்திருக்கிறார்.

 

ஐக்கிய அரபு அமீரகம் சென்றதன் மூலம் நண்பரும் சகோதரருமான எகிப்து சன்னி முஸ்லிம்களின் தலைவரான சேக் அகமது அல்-தயேப்பை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக திருத்தந்தை குறிப்பிடடுள்ளார். .

 

வருங்காலத்தை நோக்கி நிகழ்காலத்தில் வாழும் மக்களைச் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் மக்களில் 80 சதவீதத்தினர் முஸ்லிம்கள். கிறிஸ்தவர்கள் 9 சதவீதம் பேரும் பிற மதத்தினர் 1 சதவீதமும் இருக்கின்றனர்.

 

இங்கு வாழும் பெரும்பான்மையான கத்தோலிக்கர்கள் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளிகளே.

Add new comment

6 + 6 =