குழந்தை கடத்தல் சந்தேக வழக்கில் அருட்சகோதரிக்கு பிணை மறுப்பு


குழந்தை கடத்தல் சந்தேகத்தின் பேரில் 6 மாதங்களுக்கு முன்னால், இந்தியாவின் கிழ்கிலுள்ள ஜார்கண்டில் கைதாகி காவலில் வைக்கப்பட்டுள்ள மிஷ்னரிஸ் ஆப் சேரிட்டி சபை அருட்சகோதரிக்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

 

இந்த வழக்கில் காவல்துறை இதுவரை குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று கூறி இந்திய உச்ச நீதிமன்றம் பிணை மனுவை நிராகரிததுள்ளது.

 

ஆனால், காவல்துறை முறையாக அவர் மீது விரைவாக குற்றச்சாட்டு பதிய செய்ய சொல்ல, இன்னொரு மனுவை அளிக்க இது கூறியுள்ளது.

 

ஜார்கண்டின் தலைநகர் ராஞ்சியில் நிர்மல் கரிடே (இளகிய இதயம்) என்கிற திருமணம் செய்யதவர்களுக்கான இல்லத்தை தலைமை தாங்கி நடத்தி வந்த அருட்சகோதரி கொன்சிலியா தொடக்கத்தில் 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.

 

குழந்தையை தத்து கொடுப்பதற்கு வாரிசு இல்லாத தம்பதியரிடம் பணம் வாங்கிவிட்டு பின்னர், குழந்தையை கொடுக்கவில்லை என்று இந்த இல்லத்தன் ஊழியர் ஒருவர் மீதான புகாரை தொடர்ந்து 61 வயதான இந்த அருட்சகோதரியும், அந்த ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

 

அதுமுதல் இரண்டு முறை அவர் தொடுத்த பிணை மனுக்கள் மறுக்கப்பட்டதால் அவர் உச்சி நீதிமன்றத்தை நாட வேண்டியதாயிற்று.

 

குற்றமற்ற, உடல் ரீதியாக நலமில்லாத இந்த அருட்சகோதரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை பார்த்து நாங்கள் கவலையடைகிறோம் என்ற இந்திய ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் ஆயர் தியோடோர் மஸ்காரன்காஸ் கூறியுள்ளார்.

 

நீரிழிவால் இந்த அருட்சகோதரி துன்பப்பட்டு வருகிறார்.

 

கொலையாளிகளும், முக்கிய குற்றவாளிகளும் பிணை பெறுகின்றபோது குற்றமற்ற, வயதான இந்த அருட்சகோதரிக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது என்று  ஆயர் தியோடோர் கூறியுள்ளார்.

Add new comment

14 + 5 =