ஒழுங்கில்லா நிதி பரிமாற்றத்தை வெளிப்படுத்திய ஜகோபைட் திருச்சபையின் கணக்கு தணிக்கை


கடந்த பத்து ஆண்டுகளாக மலங்கரா ஜகோபைட் சிரியன் கிறிஸ்தவ திருச்சபை மேற்கொண்டுள்ள நிதி பரிமாற்றங்களில் பெருமளவிலான ஒழுங்கில்லா நிதி பரிமாற்றம் காணப்படுவதாக சமீபத்தில் நடத்திய கணக்கு தணிக்கையில் தெரியவந்துள்ளது.

 

அசல் பணப்பற்று சீட்டுகள், ரசீதுகள் மற்றும் செலவு சீட்டுகள் இல்லாதது, பயண செலவுகளில் குறைபாடுகள், பல சம்பவங்களில் பணம் செலவு செய்தததில் தெளிவின்மை ஆகியவை இந்த கணக்கு தணிக்கையில் வெளியாகியுள்ளன.

 

சரியான பதிவுகள் இல்லாமல் பணம் செலவு செய்யப்பட்டிருப்பது திருச்சபை மேலாண்மை குழுவால் நடத்திப்பட்ட கணக்கு தணிக்கை காட்டுகிறது.

 

பணிக்காக முன்னதாகவே வழங்கப்பட்டுள்ள பல லட்ச பணத்தொகைகான பற்றுச்சீட்டில் யார் பெற்றுகொண்டார்கள் என்றோ, அவர்களின் கையெப்பமோ இல்லை.

 

என்ன வேலைக்காக இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த முன்னரே பணம் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டில் குறிப்பிடப்படவில்லை.

 

அசல் ரெசீது கொடுக்கப்படாமலேயே போக்குவரத்து செலவுகள் வழங்கப்பட்டுள்ளன.

 

வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பணத்திற்கும் சரியான ரெசீது இல்லை.

 

தட்டுமுட்டு சாதனங்கள், கருவிகள் வாங்கியது, கல்வி அறக்கட்டளைக்கான செலவுகள் பற்றிய பரிமாற்ற விவரங்களும் இல்லை.

 

பல்வேறு நீதிமன்றங்களில் சட்ட வழக்குகளை வாதிட்டதற்கான செலவுகளின் விவரங்கள் திருச்சபையிடம் இல்லை. இதனால் இந்த திருச்சபையின் செயல்பாடுகள் முடங்கி போயுள்ளன.

Add new comment

3 + 1 =