ஜனவரி மாதத்தை 'தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதமாக' கொண்டாடும் அமெரிக்க மாநிலம்


அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலினா மாநிலத்தில், ஜனவரி மாதம் 'தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதமாக' அனுசரிக்கப்படும் என்று அந்த மாநில ஆளுநர் ராய் கூப்பர் அறிவித்துள்ளார்.

 

அமெரிக்காவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றான வடக்கு கரோலினாவில், தமிழர்கள் அதிக அளவில் வசித்துவருகின்றனர். 

 

இந்த மாநில அரசியலில் முக்கியப்பங்காற்றுபவர்களாக தமிழர்கள் உள்ளனர்.

 

ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக அனுசரிக்க மாநில அரசிடம் தமிழர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

 

இந்த முடிவை அறிவித்து அளுநர் வெளியிட்ட காணொளியில், வடக்கு கரோலினாவில் வசிக்கும் தமிழர்கள், இந்த மாநில வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளனர். உலக அளவில் இன்றும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் இருக்கும் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

சிங்கப்பூர், மலேசியா, கனடா போன்ற நாடுகளில் தமிழ் மொழி அதிகம் பேசப்படும் நிலையில், அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் தமிழ் மொழியையும் தமிழ் கலாசாரத்தையும் அங்கீகரித்திருப்பது தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமையாகும்.  

 

Add new comment

7 + 3 =