ஜாக்டோ-ஜியோ நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ்


அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கம் (ஜாக்டோ-ஜியோ) நடத்திய தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

 

புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இதனை தெரிவித்தனர்.

9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி

'ஜாக்டோ ஜியோ சார்பாக கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

 

8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்று எழுச்சியுடன் போராடினர்.

 

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளதால்,. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அனைத்து கட்சி தலைவர்கள், அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று எங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Add new comment

2 + 0 =