இந்தோனீசியாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு -  விரைகிறது திருச்சபையின் உதவி


கடந்த வாரம் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு இந்தோனீசிய கத்தோலிக்கர்களின் உதவிகள் விரைவாக சென்றடைந்து வருகின்றன.

 

இந்த இயற்கை பேரழிவால், டஜன்கணக்கானோர் கொல்லப்பட்டு்ளளனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

 

குறைந்தது 68 பேர் இறந்துள்ளதாகவும், 6 ஆயிரத்து 700 பேர் வீடிழந்துள்ளதாகவும் தேசிய பேரிடர் குறைப்பு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் சுடோபோ புர்வோ நியுகுரோஹோ கூறியு்ளளார்.

 

கடந்த பல தசாப்தங்களில் காணாத அழிவாக இது பார்க்கப்படுகிறது.

 

சுலவேசி மாகாணத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்களில் 550 வீடுகள் அழிந்துள்ளன. 5,100 வீடுகள் நீரில் மூழ்கிவிட்டன.

 

பள்ளிகள், வழிபாட்டு இடங்கள், பாலங்கள் ஆகியவற்றில் பெரும் சேதங்களை உருவாக்கியுள்ள வெள்ளப்பெருக்கு, 13 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களையும் மிக மோசமாக பாதிக்க செய்துள்ளது என்று செய்தி தொடர்பாளர் நியுகுரோஹோ கூறியுள்ளார்.

 

அணை ஒன்று நிரம்பி அதிக நீர் வெளியேறியதில் காணாமல்போன 7 பேரை கண்டுபிடிப்பதற்கு தேடுதல் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 

உணவு போன்ற அடிப்படை தேவைகளை விநியோகித்துள்ளதாகவும், சுகாதர உபகருணங்கள் மற்றும் ஆடைகளை இன்னும் திரட்டி வருவதாகவும் காரிதாஸ் ஒருங்கிணைப்பாளர் மார்ட்டினா எல்லா கூறியுள்ளார்.

Add new comment

2 + 11 =