உலக இளைஞர் தினத்தில் அமைதிக்காக பேரணி சென்ற கொரியர்கள்


கர்தினால் ஆன்ட்ரூ இயோம் சூ-ஜூங், துணை ஆயர் பீட்டர் ச்சுங் சூன்-தயேக் ஆகியோரோடு சேர்ந்து சியோல் உயர் மறைமாவட்டத்தை சேர்ந்து தென் கொரிய இளைஞர்கள் பனாமாவுக்கு புனிதப்பயணமாக சென்று, அங்கு நடைபெறும் உலக இளைஞர்கள் தின கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

ஒரு மணிநேர சிறப்பு ஆராதனை மேற்கொண்ட அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸோடு சிலுவை பாதை மேற்கொள்வதற்கான முக்கிய இடத்திற்கு செல்லும் பாதையான சின்டா கோஸ்டிரியாவுக்கு நடந்து புனிதப் பயணம் மேற்கொண்டனர்.

 

இறுதி போதனைக்கு பின்னர், கிறிஸ்டோ ரே தேவாலயத்தில் ஒன்றுகூடிய கொரிய புனித பயணிகள் ஆராதனை நேரத்தில் கொரியாவில் அமைதிக்கும், ஒன்றிப்புக்கும் செபித்துள்ளனர்.

 

கர்தினால் யோமும், ஆயர் ச்சுவாங்-கும் தங்களுக்கு பீடத்திற்கு அருகில் ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில் உட்காராமல் இளைஞர்களோடு உடனிருந்து சிலுவை பாதையை செய்துள்ளனர்.

 

“நான் கடவுளின் பணியாளர். உமது சித்தப்படி நடக்கட்டும்” என்ற தலைப்பில் ஜனவரி 22 முதல் 27 வரை உலக இளைஞர் தினம் நடைபெற்றுள்ளது.  

Add new comment

10 + 3 =