குழந்தை பாதுகாப்பு பணிக்குழுவை உருவாக்க வத்திக்கான் திட்டம்


குழந்தை பாதுகாப்பு பற்றி பிப்ரவரியில் நடைபெற்ற வத்திக்கான் கூட்டத்திற்கு பின்னர், அதற்கான பணிகளை தொடர்வதற்கு ஒவ்வொரு கண்டங்களிலும் குழுக்களுடனான பணிக்குழு ஒன்றை உருவாக்க திட்டமிட்டு வருவதாக இந்த உச்சி மாநாட்டின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

 

உலக நாடுகளிலுள்ள ஆயர்களுக்கு நாங்கள் வழங்குகின்ற நடைமுறை நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த பணிக்குழு இருக்கும் என்று இயேசு சபை அருட்தந்தை ஹான்ஸ் சோலினிர் வத்திக்கான் செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.

 

குழந்தை பாதுகாப்பை உறுதி செய்ய திருச்சபை தொடங்கியுள்ள நீண்ட பயணம் வத்திக்கானில் நடைபெற்ற இந்த கூட்டத்தோடு நின்றுவிடாமல் இன்னொரு முய்ற்சியை உருவாக்கி வழங்குவதே தங்களின் நோக்கமென அவர் கூறியுள்ளார்.

 

திருச்சபை நிலைகொண்டுள்ள பல்வேறுபட்ட கண்டங்கள் அனைத்திலும், குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர்களால் உருவாக்கப்பட்ட இந்த பணிக்குழு எல்லா இடங்களுக்கும் பயணித்து தங்களின் பணிகளை மேற்கொள்ளும். என்று அருட்தந்தை சோலினிர் கூறியுள்ளார்.

 

அருட்தந்தை சோலினிர் வத்திக்கான் கூட்டத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரும், கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழக்த்தின் வயதுக்கு வராதோரை பாதுகாக்கும் மையத்தின் தலைவரும், வயதுக்கு வராதோரை பாதுகாக்கும் பாப்பிறை ஆணையத்தின் உறுப்பனருமாக விளங்கி வருகிறார்.

Add new comment

1 + 0 =