அமெரிக்காவின் மூன்று மாகாணங்களில் “ரேடியோ மிர்ச்சி”


இந்தியாவில் பிரபலமான பண்பலை வானொலியாக திகழ்ந்து வரும் “ரேடியோ மிர்ச்சி” அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட் ஆகிய மாகாணங்களில் சேவையை  தொடங்கியுள்ளது.

 

அங்கு இதன் அலைவரிசை 1600AM ஆகும். மேலும் ராலேக்-துர்ஹாம், வடக்கு கரோலினா ஆகிய இடங்களில் 99.9 FM HD-4, 101.9 FM, பால்டிமோரில் 1490 AM, மேரிலாண்டில் 92.3 FM HD-2, பிலடெல்பியா, பென்சில்வேனியாவில் 103.9 FM HD-2 ஆகிய அலைவரிசைகளிலும் இதனை கேட்கலாம்.

 

இன்னும் சில வாரங்களில் “ரேடியோ மிர்ச்சி”-யின் சேவையை கிளிவ்லாண்ட், ஓஹியோ; கொலம்பஸ், ஓஹியோ; அட்லாண்டா, கார்ஜியா; ரிச்மண்ட், விர்ஜினியா மற்றும் செயிண்ட் லூயிஸ், மிச்சவுரி ஆகிய இடங்களில் HD சேனல்களாக கேட்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. .

Add new comment

4 + 11 =