ரோஹிஞ்சா அகதிகளை விடுதலை செய்ய இந்தியாவிடம் கோரிக்கை


இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள  31 ரோஹிஞ்சா அகதிகளை இந்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய “ஃஃபோர்ட்டிஃபை ரைட்ஸ்” என்ற மனித உரிமை குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.  

 

கடந்த ஜனவரி 18 முதல் திரிபுரா அருகேயுள்ள இந்திய- வங்கதேச எல்லைப்பகுதியில் யாரும் நடமாடாத நிலப்பகுதியில் சிக்கிய ரோஹிஞ்சா அகதிகளை கையாள்வதில் இந்திய படைகளுக்கும் வங்கதேச படைகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

 

அகதிகளை தங்களுடைய நாட்டு எல்லைக்குள் அனுப்புவதாக இரு படைகளும் மாறிமாறி குற்றம்சாட்டின.

 

இரு நாட்டு படைகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், 31 ரோஹிஞ்சா அகதிகளும் திரிபுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

இது தொடர்பாக, ஃபோர்ட்டிஃபை ரைட்ஸ்” அமைப்பின் தலைமை செயல் அதிகாரி மாத்யூ ஸ்மித் கருத்து தெரிவிக்கையில், இனப்படுகொலையை எதிர்கொள்ளும் ரோஹிஞ்சா மக்களை இந்தியா பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பை வேண்டும். இந்தியாவிலிருந்து கட்டாயமாக வெளியேற்றக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த மே மாதம் 2018ம் ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு 1,300க்கும் மேற்பட்ட ரோஹிஞ்சா அகதிகள் சென்றுள்ளதாக அகதிகள் நிவாரணம் மற்றும் நாடுதிரும்பலுக்கான ஆணையர் அபுல் கலாம் தெரிவித்துள்ளார்.  

 

இந்தியாவில் 40 ஆயிரம் ரோஹிஞ்சா அகதிகள் பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றனர். இதில் 18 ஆயிரம் பேர் ஐக்கிய நாடுகள் அவையிடம் பதிவு செய்தவர்கள்.

Add new comment

12 + 7 =