Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஒழுக்கத்தை புகுத்த தடுமாறும் இந்தியாவின் கிழக்கு திருச்சபை
கர்தினால் ஆலஞ்சேரியின் தலைமையில் கூடி எடுத்த தீர்மானங்கள் அடங்கிய சுற்றறிக்கைக்கு, தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மக்கள் சிலர் அவற்றை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
ஏர்ணாகுளத்தின் மிகவும் விறுவிறுப்பாக இயங்குகின்ற சந்தைக்கு அருகில் இருக்கின்ற கர்தினால் ஜார்ஜ் ஆலங்சேரியின் இல்லத்திறகு அருகிலும் போராட்டங்கள் நடைபெற்று போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த போராட்டங்கள் அனைத்தும் மீண்டும் செய்தித்தாள்களின் தலைப்பு செய்திகளாக வெளிவந்துள்ளன.
ஜனவரி 7 முதல் 18ம் தேதி வரை நடைபெற்ற சீரோ-மலபார் போரவை, அந்த திருச்சபைக்குள் ஒழுக்கங்களை கொண்டுவரும் விருப்பத்தை வெளிப்படுத்தியது.
மொத்தமுள்ள 34 மறைமாவட்டங்களில், 45 லட்சம் கத்தோலிக்கர்களை கொண்டுள்ள இந்த திருச்சபையின் கத்தோலிக்கர்களுக்கு தோவாலயங்களில் இந்த சுற்றறிக்கை வாசித்து காட்டப்பட்டது.
சீரோ-மலபார் திருச்சபையின் தலைவரான கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி ஈடுபட்டதாக கூறப்படும் நில விவகார சர்ச்சை பற்றி வெளிப்படையாக யாரும் அறிக்கை வெளியிட கூடாது என்று இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்க்பபட்டிருந்தது.
திருச்சபையில் அதிகாரத்தில் இருப்போர் செயல்படாமல் இருக்கையில், இத்தகைய போராட்டம் திருச்சபையில் நீதிக்காக போராடும் அருட்தந்தையர், அருட்சகோதரிகள் மற்றும் பொது நிலை தலைவர்களின் நடவடிக்கை என்று கூறப்பட்டது.
சீரோ-மலபார் திருச்சபைக்கு சொந்தமான நிலத்தை ஒரு கோடி டாலர் இழப்பு ஏற்படும் வகையில், கர்தினால் ஆலஞ்சேரியும், இரு மூத்த அருட்தந்தையரும் சேர்ந்து விற்றுவிட்டதாக சில அருட்தந்தையர் குற்றச்சாட்டியபோது, இந்த விவகாரம் ஊடக வெளிச்சத்திற்கு வந்தது.
Add new comment