மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மோடி நாட்டினார் அடிக்கல்


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இந்திய தலைமையமைச்சர் நரோந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

 

மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிகளில சிறப்பு தனிசிறப்பு மருத்துவமனை போன்ற பல்வேறு திட்டங்களையும் மோடி தொடங்கி வைத்தார்.

 

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு சமீபத்தில்தான் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

 

ரூ.1,264 கோடி செலவில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் உருவாக்கப்படும்.

 

முற்பகல் 11.15 மணியளவில் மதுரை வந்த மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

 

இந்த விழாவை தொடர்ந்து, அதே மைதானத்தில் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாஜக பொதுக்கூட்டத்திலும் பேசினார்.

Add new comment

1 + 0 =