அமெரிக்காவில் மரியாதை பெறும் சதந்திர போராளி கர்தினால் சென்


கம்யூனிசதத்தால் பாதிக்கப்பட்டோர் நினைவு பவுண்டேஷன் அநீதியை எதிர்த்து வெளிப்படையாக பேசுகின்ற கர்தினால் ஜோசப் சென்னுக்கு ட்ரூமேன்-ரீகன் விருதை ஜனவரி 28ம் தேதி வழங்குகிறது.

 

கம்யூனிசத்திற்கும், பிற எல்லா வடிவ கொடுங்கோன்மைக்கு எதிராக வாழ்க்கை முழுவதும் சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் பணியாற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்த விருதை பெறுவதற்கு எற்கெனவே அமெரிக்கா சென்றுள்ள 87 வயதான ஓய்வுபெற்ற முன்னாள் ஹாங்காங் ஆயர் சென், ஆயர்கள் நியமனம் பற்றிய வத்திக்கான்-சீன தற்காலிக் ஒப்பந்தத்தை எதிர்த்தும், சீனாவிலுள்ள நிழலுலக திருச்சபையின் கவலைகளை சுட்டிக்காட்டியும் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.

 

இந்த பவுண்டேஷனின் செயலதிகாரி மரியோன் ஸ்மித் கூறுகையில், சீனாவில் மத சுதந்திரம் மறுக்கப்பட்டவர்களுக்காக கர்தினால் சென் குரல் கொடுத்துள்ளார்.

 

மேலும், திருச்சபையின் அதிகார நியமனங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், வத்திக்கானும் இணைந்து செயல்படுவதையும் அவர் எதிர்த்து வந்துள்ளார்.

 

கர்தினால் ஜோசப் சென்னை ஹாங்காங்கின் புதிய மனப்பான்மை என்றும், ஹாங்காங் மற்றும் சீன பெருநிலப்பகுதியில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் என்றும் இந்த பவுண்டேஷன் புகழ்ந்துள்ளது.

 

1989ம் ஆண்டு தியன்ஆன்மென் சதுக்கத்தில் ராணுவத்தை அனுப்பி கம்யூனிஸ்ட் கட்சி மக்களை கொன்று குவித்ததையும், ஃகாலுன் கொங் ஆன்மிக இயக்கத்தை கொடூரமாக கையாண்டதையும் கர்தினால் சென் விமர்சித்துள்ளார் என்றும் அது கூறியுள்ளது.

Add new comment

4 + 1 =