ஓய்வு பெறுவதற்கான திருப்பலியை புறக்கணித்த சீன நிழலுலக ஆயர்


ஓய்வு பெறுவதற்கு விருப்பம் இல்லாத காரணத்தால், சீன நிழலுலக ஆயர் ஒருவர், அவருக்காக நிறைவேற்றப்பட்ட திருபலியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.

 

ஷான்பு மறைமாவட்டத்தில் நிகழ்ந்த பிரியாவிடை நிகழ்வில் ஆயர் ட்சுவாங் ஜியன்ஜியன் பங்கேற்றார்.

 

ஆனால், அவருக்காக நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் அவர் பங்கேற்கவில்லை.

 

இந்த திருப்பலியை ஆயர்கள் நியமனம் தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கையெழுத்தான சீன வத்திக்கான் ஒப்பந்தத்திற்கு முன்பு வரை திருச்சபையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த பின்னர் திருத்த்நதை பிரான்சிஸால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆயர் ஹூவாங் பிங்ட்சாங் நிறைவேற்றினர்ர்.

 

நிழலுலக ஆயர்களால் நடத்தப்பட்டு வந்த சீன அரசால் ஏற்றுக்கொள்ளப்படாத முன்னாள் ஆயர்கள் முறையாக மறைமாவட்டங்களுக்குள் அமர்த்தப்படுவதை ஆராய கட்ந்த மாதம் வத்திக்கான் பிரதிநிதி ஒருவர் சீனாவில் பயணம் மேற்கொண்டார்.

 

தான் பெய்ஜிங்கிற்கு சென்று கத்தோலிக்க தலைமைப்பீட பிரதிநிதி பேராயர் கிளெதியோ மரியா செல்லியை சந்தித்ததாகவும், அவர் ஓய்வுபெற கேட்டுகொண்டதற்கு தான் பதிலளிக்கவில்லை எனவும் கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி ஆயர் ட்ச்சுவாங் தெரிவித்திருந்தார்.

 

ஆயர் ட்ச்சுவாங்-கிற்கு பதிலாக 52 வயதான ஆயர் ஹூவாங் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அரசால் அங்கீகரிக்க்பபட்ட மற்றும் நிழலுலக திருச்சபைகளை இணைப்பது சீன-வத்திக்கான் ஒப்பந்தத்தின் நோக்கமாக இருந்தாலும், ஆயர் ட்ச்சுவாங்கிற்கு ஆதரவான அருட்தந்தையர் பலரையும் இந்த ஆயருக்கான பிரியாவிடை விழாவில் பங்கேற்க கூடாது என்று அதிகாரிகள் மிரட்டியுள்ளதாக நிழலுலக கத்தோலிக்கர் ஒருவர் கூறியுள்ளார்.

 

இந்த பிரியாவிடை விழாவில் கலந்து கொண்டால் கொல்லப்படுவார் என்று மிரட்டப்பட்டதாக அருட்த்தந்தை ஒருவர் கூறியுள்ளார்.

Add new comment

1 + 0 =