வெனிசுவேலாவில் ராணுவத்தின் உதவியோடு மதுரோ ஆட்சி தக்கவைப்பு


வெனிசுலாவில் வலிமையான இருக்கின்ற ராணுவத்தின் ஆதரவோடு தனது அதிபர் பதவியை  நிகோலஸ் மதுரா தக்கவைத்துள்ளார்.

 

இதன் காரணமாக அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாடு அந்நாட்டில் இன்னும் அதிகரித்துள்ளது.

 

இரண்டு நாட்களுக்கு முன் இடதுசாரித் தலைவரான நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக நாட்டில் வன்முறை வெடித்து, 26 பேர் பலியானார்கள்.

 

எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குயாடோ, அமெரிக்காவின் ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்தார்.

 

எதிர்க்கட்சியின் தலைவருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மதுரோவின் ஆட்சி சட்ட விரோதமானது என்றார்.

 

பிற நாடுகளும் அமெரிக்காவை போல வெனிசுவேலா எதிர்க்கட்சியை ஆதரிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

 

இதன் காரணமாக மதுரோ, அமெரிக்கத் தூதரகங்களை மூட உத்தரவிட்டார்.

 

வேனிசுவேலாவின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் ராணுவத் தலைவருமான விளாடிமிர் பத்ரினோ, மதுரோவை சட்டபூர்வமான அதிபராக அறிவித்தார்.

 

பிற 8 தலைவர்களும் மாநிலத் தொலைக்காட்சியில், மதுராவை எற்றுக்கொண்டு செயல்படுவதாக அறிவித்தனர்.

 

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுதான் வெனிசுலா.

 

இதனை ஆண்ட ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்தபின் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றார்.

 

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார்.

 

வெனிசுவேலா கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் திண்டாடி வருகிறது.

Add new comment

14 + 5 =