கேரளா பெண்களின் சுவர் டிரம்பின் சுவரை விட சிறந்தது – பெண் ஆயர்


சபரிமலையில் பெண்கள் நுழைவது தொடர்பாக கேரள பெண்கள் அமைந்த போராட்ட சுவர், அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் கட்டுவதற்கு முயற்சிக்கின்ற அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் அமையும் தடுப்பு சுவரை விட சிறந்ததாகும் என்று கனடா ஆங்கிலிக்கன் திருச்சபையின் பெண் ஆயர் ஜென்னி அன்டிசன் தெரிவித்திருக்கிறார்.

 

கேரள பெண்களின் போராட்ட சுவர் பற்றியும், அதன் தொடர்பான பிரச்சனை பற்றியும் வாசித்து அறிந்து வைத்துள்ளதாக சிஎஸ்ஐ மாநாட்டில் பேசுகையில் பெண் ஆயர் ஜென்னி அன்டிசன் குறிப்பிட்டுள்ளார்.

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் எல்லா வயது பெண்களும் நுழைய அனுமதித்து இந்திய உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பு பற்றியும் அறிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 

பெண்கள் இல்லாமல் திருச்சபை முடங்கிவிடும். பெண்கள் தலைமை பொறுப்புக்களை ஏற்க வேண்டிய நேரம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்திய திருச்சபைகள் பெண்களுக்கு அதிக பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்த அவர், திருச்சபைகள் பெண்களை ஈடுபடுத்தாவிட்டால், மக்களில் 50 விழுக்காட்டினரை தவறவிட்டு விடுவீர்கள் என்று கூறியுள்ளார்.

Add new comment

8 + 7 =