எடை குறைவான செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது இந்தியா


உலகிலேயே மிகவும் எடை குறைவான கலாம் சாட் V2 என்ற செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் ஏவியுள்ளது.

 

விண்வெளி கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த செயற்கைக்கோளின் எடை 1.26 கிலோதான்.

 

சென்னை அடுத்த ஸ்ரீஹரிக்கோட்டாவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளத்தில் இருந்து, இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு 11.37க்கு பிஎஸ்எல்வி சி44 ராக்கெட் செலுத்தப்பட்டது

 

இது சுமந்து செல்லும் செயற்கைக்கோள்களில் கலாம் சாட்டும் ஒன்று.

 

பொழுதுபோக்குக்கு நடத்தப்படும் ரேடியோ சேவைகளான ஹேம் ரேடியோ சேவைகளை நடத்துவோருக்கு இது உதவும்.

 

இந்த செயற்கைக்கோள் பள்ளி மாணவர்களுக்கு எதிர்கால விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்களாகவும் வருவதற்கு பெரும் ஊக்கம் அளிக்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Add new comment

7 + 0 =