காவல்துறையில் முதல்முறையாக மாணவர் காவல் படை


தமிழ் நாட்டின் காவல்துறையில் முதன்முதலாக மாணவர் காவல் படை தொடங்கப்பட்டுள்ளது.

 

சென்னை காவல் ஆணையரும், சென்னை ஆட்சியரும் இதனை தொடங்கி வைத்துள்ளனர்.

 

இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் நோக்கில் பள்ளிப் பருவத்திலேயே விழிப்புணர்வையும் நல்ல சிந்தனையையும் வளர்க்க கல்வித்துறையும், காவல்துறையும் இணைந்து பள்ளி மாணவர்களைத் தயார் செய்யும் நிகழ்வாக இது தொடங்கியுள்ளது.

 

தமிழக காவல்துறையும், வருவாய்த் துறையும், பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து மாணவர் காவல் படை” என்ற புதிய மாணவர் படையை உருவாக்கியுள்ளனர்.

 

இன்றைய நிகழ்ச்சியில், 138 பள்ளிகளிலிருந்து 6,072 மாணவ, மாணவியர்கள், மாணவர் காவல் படையில் உறுப்பினர்களாக இணைந்தனர்.

 

சாலை பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு, சமூகத் தீமைகளுக்கு எதிராகப் பணிபுரிதல், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து இந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

Add new comment

7 + 3 =