அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ்


அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்கின்ற அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக் கட்சி சார்பாகப் போட்டியிட உள்ளதாக தெரியவந்துள்ளது.

 

2020-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

 

ஜனநாயகக் கட்சியின் சார்பில் தற்போதைய ட்ரம்பின் அரசை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள கமலா ஹாரீஸ் லட்சக்கணக்கான மக்கள் அவர்களது குரலை நமது உரிமைகளுக்காக உயர்த்திப் பிடிப்பதில்தான் அமெரிக்காவின் எதிர்காலம் இருக்கிறது. எனவேதான் அமெரிக்க அதிபருக்கான போட்டியில் இருக்கிறேன் என்று கமலா ஹாரீஸ் கூறியுள்ளார்.

 

மேலும், அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்குப் போட்டியாக குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் கலிபோர்னியா செனட் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

 

இதன் மூலம் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமை பெற்றார்.

 

கமலா ஹாரிஸின் தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்.. தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவராவார்.

Add new comment

2 + 1 =