தொடர்வண்டி நிலையங்களில் மண் குவளை பயன்பாடு


தொடர்வண்டி நிலையங்களில் மண் குவளை பயன்பாட்டை மீண்டும் கொண்டுவரப்படவுள்ளது.

 

அதற்கான பரிசார்த்த முயற்சியாக வாரணாசி, ரேபரேலி தொடாவண்டி நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

தொடர்வண்டி நிலையங்களில் மண் குவளைகளை 15 ஆண்டுகளுக்கு முன் தொடர்வண்டித்துறையின் முன்னாள் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிமுகம் செய்தார். காலப்போக்கில் இது மறைந்துவிட்டது.

 

சமீபத்தில் வாரணாசி, மற்றும் ரேபரேலி தொடர்வண்டி நிலைய அதிகாரிகளுக்குப் பிறப்பித்த உத்தரவில் பயணிகளுக்கு வழங்கும் உணவுப் பொருட்கள், பால், தேநீர், காபி உள்ளிட்டவற்றை மண் குவளையிலும், பீங்கான் தட்டுகளிலும் வழங்க மத்திய தொடாவண்டித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கோரியுள்ளார்.

 

அத்தகைய பொருட்களின் தயாரிப்பில், மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை இது வழங்கும் என்று தொடர்வண்டித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட குவளைகள், தட்டுகளைப் பயணிகளுக்கு உணவுப்பொருட்கள், தேநீர், பால் ஆகியவற்றை வழங்கப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Add new comment

1 + 2 =