சீன சிறையில் இருந்து உயிர் பிழைத்தவரின் குருபட்ட கொண்டாட்டம்


இருபது ஆண்டுகளுக்கு மேலாக சீனாவில் சிறையில் அடைக்கப்பட்ட இயேசு சபை குருவானவர் ஒருவர் தன்னுடைய 25 ஆண்டு குருப்பட்ட ஆண்டு நிறைவை கொண்டாடியுள்ளார்.

 

ஜனவரி 9ம் தேதி தைபெய் குடிங் திருஇதய தேவாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி 85 வயதான அருட்தந்தை மேத்யூ லி-டெக் இதனை கொண்டாடினார்.

 

அவரோடு இந்த திருப்பலியில், ஷாங்காய் நிழலுலக அருட்தந்தையாக இருக்கின்ற அவரது சகோதரர் அருட்தந்தை ச்ச யு-டெக் கலந்து கொண்டார்.

 

இந்த வெள்ளிவிழா கொண்டாட்டத்திற்கு முன்னால், அருட்தந்தை யு-டெக் சீனாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவாரா என்று சந்தேகம் நிலவியது.

 

2005ம் ஆண்டு அவருடைய சகோதரர்கள் வெளிநாட்டு புனித பயணம் மேற்கொண்டபோது, விமானத்தில் ஏறிய யு-டெக் ஷாங்காய் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்த நிறுத்தப்பட்டார்.

Add new comment

1 + 2 =