காலாவதியான மோடியின் ஆட்சி


இந்திய தலைமையமைச்சர் மோடி ஆட்சியின் காலாவதியாகிவிட்டது. இனி மத்தியில் எதிர்க்கட்சிகள்தான் ஆட்சியை பிடிக்கும் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்

 

இந்திய மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதற்காக தற்போதே தேசிய, மாநில அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

 

உத்தரபிரதேசத்தில் சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். இதனால், அந்த மாநிலத்தின் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

 

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது.

 

ஒவ்வொரு மாநிலமாக பாஜக ஆட்சியை இழந்து வருகிறது.

 

மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மக்கள் இந்த அரசு மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். பிரதமர் மோடியை தூக்கி எறிய மக்கள் தயாராகி வருகிறார்கள் என்று மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

Add new comment

7 + 1 =