சிரோ-மலபார் திருச்சபையை ஒழுங்குபடுத்த பேரவை உறுதிமொழி


சிரே-மலபார் திருச்சபைக்குள் ஒழுங்கை உறுதிசெய்ய விவரமான வழிகாட்டுதல்களை சமீபத்தில் நடைபெற்ற அதன் நிரந்தர பேரவை கொண்டு வந்துள்ளது.

 

இந்த திருச்பையின் தலைரான கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரியால் வழங்கப்பட்டுள்ள பேரவையின் இந்த முடிவுகள் அனுப்பப்பட்ட சுற்றுமடலின் ஒரு பகுதியாகும்.

 

ஊடகங்கள் மற்றும் திருச்சபைக்கு எதிரான குழுக்கள் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு சவால்விடுக்கும் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காக்கானாட்டில் புனித தாமஸ் மலையில் அமைந்துள்ள சிரோ மலபார் திருச்சபையின் தலைமையிடத்தில் நடைபெற்ற 27வது சிரே-மலபார் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையில் 55 ஆயர்கள் கலந்து கொண்டனர்.

 

சில அருட்தந்தையர் மற்றும் அருட்சகோதரிகள் சமீபத்தில் நடத்திய போராட்டங்களால் ஒழுங்கு முறையின் எல்லா எல்லைகளையும் மீறப்பட்டுள்ளதாக இந்த பேரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

 

மிகவும் கடுமையாக ஒழுங்குகளை மீறியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

அதற்கு அவர்கள் அளிக்கின்ற பதில்கள் திருப்பதியாக இல்லாத பட்சத்தில் தண்டனைகள் வழங்க்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.  

Add new comment

16 + 2 =