கேரளா அருட்சகோதரிகளின் இடமாற்றம் – முதலமைச்சர் தலையிட கோரிக்கை


பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆயர் பிரான்கோ முலக்காலை கைது செய்ய வேண்டுமென கடந்த ஆண்டு வெளிப்படையாக போராடிய 4 அருட்சகோதரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தலையிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

 

குருவிலங்காடு அருட்சகோதரிகள் இல்லத்தோடு இருக்கும் இந்த அருட்சகோதரிகள் வேறுப்பட்ட 4 இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்ற ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

 

திருச்சபையிடம் இருந்து ஆதரவு பெறாமல் இருக்கின்ற, பாதிக்கப்பட்ட அருட்சகோதரியோடு தாங்களும் இருக்க விரும்புவதை கேரள முதலமைச்சருக்கு எழுதிய கடித்ததி்ல் எழுதியிருக்கும் இந்த சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ஜெலந்தர் மறைமாவட்ட ரோமன் கத்தோலிக்க ஆயருக்கு எதிரான சாட்சிகளாக இருப்பதால், இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதால், கேரள முதலமைச்சர் இந்த பிரச்சனையில் தலையிட வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.

 

கொச்சி மாநகரில் வெளிப்படையாக இந்த அருட்சகோதரிகள் நடத்திய போராட்டத்திற்கு பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி ஆயர் பிரான்கோ முலக்கால் கைது செய்யப்பட்டார்.

 

இடமாற்ற ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு செல்ல மறுத்துவிட்ட இந்த அருட்சகோதரிகள், கோட்டயம் அருட்சகோதரிகள் இல்லத்திலேயே இருக்கப்போவதகவும் கூறியுள்ளனர்.  

Add new comment

4 + 1 =