இழப்பீட்டு திட்டத்தை நிராகரித்த நிலம் கையகப்படுத்தப்பட்ட வியட்நாமியர்


தங்களின் நிலத்தை இந்த மாதம் சட்டபூர்வமற்ற முறையில் பிடுங்கி கொண்டதாக கூறுகின்ற அருட்தந்தையர், வியட்நாம் போரில் போரிட்ட முன்னாள் வீரர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் அனைவரும் அரசின் சமீபத்திய நிதி இழப்பீட்டு திட்டத்தை கண்டித்துள்ளனர்.

 

4.8 ஹெக்டேர் விவசாய நிலத்தை இழந்தோருக்கு ஒரு சதுரமீட்டருக்கு 304 அமெரிக்க டாலர் இழப்பீட்டை தான் பின்க் மாவட்டத்தின் ஹோ ச்சி மின்க் நகரம் வழங்கி உதவும் என்று அரசு நடத்துகின்ற துயேய் டிரி செய்த்தாள் ஜனவரி 13ம் தேதி தகவல் வெளியிட்டது.

 

அரசு வலிந்து கையகப்படுத்தியதால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்ட அந்த பகுதியிலுள்ள அனைவருக்கும் 12 முதல் 18 மில்லியன் தொங் (வியட்நாம் நாணயம்) பணத்தொகையை மாவட்ட நிர்வாகம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அரசு சார்ப்பாக தொழில் பயிற்சி பெற்று கொள்ளும் இந்த பாதிக்கப்பட்டோருக்கு, இதுவரை எட்டாகனியாக இருந்து வந்த வங்கி கடனும் பெறுவதற்கு தகுயுள்ளவர்களாக இருப்பர் என்றும் இந்த செய்தித்தாள் கூறியது.

 

ஆனால், வியட்நாமில் பிறந்து ஆ்ஸ்திரேலியாவின் பார்ராமாட்டா மறைமாவட்டத்தில் ஆயராக பணியாற்றும் வின்சென்ட் நகுயன் லாங் உள்பட விமர்சகர்கள் அனைவரும், அரசின் இந்த நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கையை கண்டித்துள்ளதோடு, மக்களுக்கு போதிய இழப்பீடு வழங்காத முன்மொழியப்பட்டுள்ள இழப்பீட்டு திட்டத்தையும் நிராகரித்துள்ளனர்.

 

லோக் ஹூங் பங்கிலுள்ள 134 குடும்பத்தினருக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்த 112 வீடுகளை ஜனவரி மாதம் 4 மற்றும் 8ம் தேதிகளில் மாவட்ட அதிகாரிகள் இடித்துவிட்டனர்.

Add new comment

7 + 0 =