சீன ஆயர் மீது 40 லட்சம் டாலர் மோசடி குற்றச்சாட்டு


சொத்து முதலீட்டில் ஏற்பட்ட தோல்வி காரணமாக திருச்சபையின் பணத்தை மோசடி செய்ததாகவும், பெரிய கடன்களை கொண்டுள்ளதாகவும் சீன ஆயர் ஒருவர் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

 

திருச்சபையை வளர்ச்சியை பயன்படுத்தி சட்டபூர்வமற்ற முறையில் நிதி திரட்டவும், திருச்சபை சொத்துக்களை சட்டபூர்வமற்ற முறையில் விற்றும் குறைந்தது 5 தனியார் நிறுவனங்களை திறக்க 40 லட்சம் அமெரிக்க டாலர் தொகையை மோசடி செய்ததாக குவாங்சி மாகாணத்தின் நான்னிங் மறைமாவட்ட ஆயர் ஜோசப் தான் யான்சுவான் மீது சந்தேம் எழுந்துள்ளது.

 

இந்த ஆயரின் நிதி பற்றி முழு விவாசரணை நடத்த வேண்டுமென 200க்கு அதிகமான அருட்தந்தையர், அருட்சகோதரிகள், திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் மறைமாவட்ட கத்தோலிக்கர்கள் இன மற்றும் மத விவகாரங்களுக்கான நகராட்சி குழுவுக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

 

வேலைவாய்ப்பு துறையின் ஐக்கிய முன்னணியின் நகராட்சி கட்சி குழுவுக்கு இந்த கடிதத்தின் ஒரு பிரதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

நகராட்சி சீன கத்தோலிக்க நாட்டுப்பற்றாளர் கூட்டமைப்பின் சட்டபூர்வ பிரதிநிதி ஆயரான ஜோசப் தான் ஆகும்.

 

பொருத்தமான தேசிய நிதி மற்றும் பொருளாதார சட்டங்களையும், விதிகளையும் புறந்தள்ளிவிட்டு ஆயர் தான் திருச்சபையின் நிதியை பயன்படுத்தியதாக இந்த கடிதம் குற்றஞ்சாட்டுகிறது.

Add new comment

6 + 3 =