பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் – வங்கதேச இஸ்லாமிய குருவின் கருத்தால் சர்ச்சை


பெண்கள் பற்றிய இழிவான கருத்துக்கு மிகவும் பேர்போன வங்கதேச முற்போக்கு இஸ்லாமிய மதகுரு பெண்களின் கல்வியை எதிர்த்து கருத்து தெரிவித்திருப்பதால், செயற்பாட்டாளர்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார்.

 

சாட்டோகிராமிலுள்ள ஹாதாஜாரி இஸ்லாமிய பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற ஆண்டுக்கூட்டத்தின்போது இஸ்லாமியின் பாதுகாப்பாளர்கள் என்று பொருள்படும் அமைப்பின் தலைவரான ஷா அகமத் ஷாஃபி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

 

உங்களுடைய மகள்கள் 4 அல்லது 5வது கிரேடு முடித்த பிறகு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அனுப்பாதீாகள். அவ்வாறு அனுப்பினால், அவர்கள் கீழ்படியாமல்போய், யாராவது ஓர் ஆணை காதல் செய்து சென்றுவிடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

பெண் குழந்தைகளை பள்ளிகளுக்கு விடபோவதில்லை என்று பெற்றோர்களை தனது முன் உறுதிமொழி அளிக்கவும் செய்துள்ளார்.

 

இவரது சர்ச்சையான கருத்து சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. பலர் கோபமாக மறுமொழி அளித்துள்ளனர்.

 

இவரது இந்த கருத்து அரசியல் சாசனத்திற்கு எதிராது என்றும் அவருக்கு தண்டனை வழங்க்பபட வேண்டும் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Add new comment

1 + 0 =