ரக்கையின் நெருக்கடி - பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மியான்மர் ஆயர்


மியான்மரின் ரக்கையின் மாநிலத்தில் மோதல்கள் அதிகரிக்கும் நிலையில், எல்லா கட்சிகளும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென ஆயர் அலெக்ஸாண்டர் பையென் கோ அழைப்புவிடுத்துள்ளார்.

 

நாட்டின் ராணுவத்திற்கும், அராகான் ஆயுதப்படையினருக்கும் இடையில், முறுகல் நிலை தொடர்வதாக இந்த ஆயர் கூறியுள்ளார்.

 

ஆயுதங்களால் பிரச்சனைக்கு தீர்வு காண்பது பிரச்சனையை முடிக்காது. நிரந்தம் மற்றும் அமைதி நிலவ இருதரப்பும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டுமென ஆயர் கையென் கோ கூறியுள்ளார்.

 

ரக்கையினிலுள்ள 4 நகரங்களிலுள்ள மடாலங்களிலும், பள்ளிகளிலும் தங்களின் வீடுகளை விட்டு தப்பியோடி வந்த 4 ஆயிரத்து 500க்கு மேலானோர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 

சண்டைக்கான விலையை குடிமக்கள் செலுத்துகின்றனர். இன்னும் மோதல்கள் வலுவடைந்தால் அதிக மக்கள் தப்பியோடுவர் என்று இந்த ஆயர் தெரிவித்துள்ளார்.

 

என்றும் நிலைக்கக்கூடிய அமைதியை கொண்டு வருவதற்கு எல்லா ஆயுதக்குழுக்களோடும் ஆங் சான் சூச்சியின் அரசு பேச்சுவார்த்தை நடத்தி முன்னெடுக்கும் அமைதி முயற்சிகளுக்கு ரக்கையினில் மீண்டும் தொடங்கியுள்ள மோதல் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று 69 வயதான ஆயர் கூறியுள்ளார்.

 

வடக்கு மற்றும் கிழக்கு மியான்மரில் 4 மாத போர் நிறுத்தத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி மியான்மர் ராணுவம் அறிவித்தது.

 

ரக்கையின் போர்நிறுத்தத்தில் இருந்து தவிர்க்கப்பட்டதோடு, அராகான் படைக்கு எதிரான போர் நடவடிக்கைகளும் தொடர்ந்தன.

 

நாட்டு கவுன்சிலர் சூ கியி உள்பட மியான்மர் குடிமக்களின் தலைவர்கள் ராணுவ தலைவர் மின் அவுங் ஹலைங் தலைமையிலான ஒரு பிரதிநித்துவ குழுவோடு ஜனவரி 8ம் தேதி நிலைமையை பற்றி விவாதித்துள்ளனர்.

 

ரக்கையின் இன மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு 2009ம் ஆண்டு ரக்கையினில் அராகான் ஆயுதப்படை உருவாக்கப்பட்டது.

Add new comment

4 + 1 =