மிசோரத்தில் கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் நுழைந்த 125வது ஆண்டு


மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் வந்தடைந்த 125வது ஆண்டு அந்த மாநிலத்தில் செபங்களோடும், தேவாலய வழிபாடுகளோடும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

 

கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் மாநிலம் மிசோரமாகும்.

 

வேல்ஸிலிருந்து அருட்தந்தைகள் எல்.ஹெச் லோரின் மற்றும் சாவிட்ஜ் மறைபரப்பாளர்களாக சாய்ராங் கிராமத்தில் லாங் ஆற்றுப்படுகைகளில் வந்தது இதன் மூலம் மகிழ்ச்சியாக நினைவுகூரப்பட்டுள்ளது.

 

அவர்கள் அங்கு வந்த 1894ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி இந்த பகுதி லுஷாய் நாடாக அறியப்பட்டது.

 

பொது விடுமுறையாக அனுசரிக்கப்பட்ட அந்நாளில், பல உள்ளூர் தேவாலயங்களில் சமூக கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

 

மிசோரத்தின் தெற்கு பகுதியில் பேப்டிஸ்ட் திருச்சபையை நிறுவியோர்களில் இந்த இரண்டு மறைபரப்பாளர்களும் அடங்குகின்றனர்.

Add new comment

1 + 1 =